Categories: சினிமா

யப்பா.! இது கைதி 2 போஸ்டர் பா.! பிறந்தநாளில் விஷாலை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

வெளியிட்டது

நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த போஸ்டரை பலரும் கலாய்த்து தள்ள ஆரம்பித்து விட்டனர். திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் விஷால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் ஹீரோவான விஷாலின் பிறந்த நாள் ஆன இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது.

யப்பா.! இது கைதி 2 போஸ்டர் பா.! பிறந்தநாளில் விஷாலை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..! 1

விஷால் இன்று தனது 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். லத்தி மார்க் ஆண்டனி போன்ற சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் விஷாலை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்
அவன் இவன் படத்துக்கு பிறகு எந்த ஒரு கெட்டப் சேஞ்சும் செய்யாமல் ஒரே மாதிரியாகவே போலீஸ், மிலிட்டரி போன்ற கதாபாத்திரங்களில் மட்டுமே விஷால் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது கெட்டப்பை மாற்றி சற்று வித்தியாசமாக நடிக்க விஷால் நினைத்திருக்கிறார் போலும். இந்த மார்க் ஆண்டனி படத்தில் ஒட்டு மீசை, தாடி, டோப்பா என வைத்து வித்தியாசமாக தோற்றமளிக்கிறார் விஷால்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக மோசமாக இருப்பதாகவும், இயக்குனர் உங்களை வைத்து செய்துவிட்டார் எனவும், இது மார்க் ஆண்டனி போஸ்டர் இல்லப்பா கைதி 2 போஸ்டர் என்று நெட்டிசன்கள் விஷாலை மரணமாக கலாய்த்து வருகின்றனர். மேலும் தற்போது எடுக்கப்படும் படங்களில் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு எதிரிகளை சுடுவது போல விஷாலும் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு சுடுவது போல் போஸ்டரில் இருப்பதால் உங்களுக்கும் இந்த துப்பாக்கி பைத்தியம் பிடித்து விட்டதா என்றும் ரோல் செய்து வருகின்றனர்.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்