தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகுமார். தனது நடிப்பால் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தார்.

தமிழில் இவர் 200க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவை கலக்கி வருகிறார் விஜயகுமார். தன்னை போல தனது மகள் மற்றும் மகன்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் விஜயகுமார்.

இவரின் மகன் அருண்விஜய் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். மேலும் விஜயகுமாரும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது விஜயகுமார் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

இந்த புகைப்படங்களை அவரது மகள் அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.