ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் அதில் நடிக்க உடன்பாடு இல்லாததால் நடிக்கவில்லை என்றும் நடிகர் விஷால் தெரிவித்தார். இது நடிகர் சரத்குமாரை மறைமுகமாக விமர்சிப்பதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டங்களால் பல உயிர்கள் தொடர்ந்து பறி போகிக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டி வருகிறது. இதனால் பல உயிர்கள் தொடர்ந்து பறிபோவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்தார். சரத்குமாருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சரத்குமார் எப்போது பேசும் பொழுதும் விளம்பரத்தில் நடிப்பதாலேயே அந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அவரவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று தெரியும் என்ற ரீதியில் சரத்குமார் பதில் அளித்து வருகிறார். இந்த நிலையில் சேலத்திற்கு சென்ற விஷாலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் இரண்டு கைகளால் உழைத்து சம்பாதித்து அதை கொண்டு போய் வீட்டில் கொடுத்து ஒருவேளை சாப்பிட்டால் அதுதான் உண்மையான ஆண்களுக்கு அழகு. சூதாட்டத்தில் வரும் பணம் என்றைக்கும் நிலைக்காது என்று பேசினார்.
மேலும் தன்னிடம் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விளம்பரத்தில் தன்னை நடிக்க வருமாறு பலர் கேட்டதாகவும் ஆனால் தன்னால் அது முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் கூறினார். சூதாட்டத்தில் சம்பாதிக்கும் பணம் ஒரு நாள் வரும் இரண்டு நாள் வரும். ஆனால் அந்த பணம் நிலைக்காது என்றும் அவர் பேசினார். அவரின் அந்த காணொளியை பார்த்த இணைய நெட்டிசன்கள் பலரும் சரத்குமாரை தான் விஷால் இப்படி மறைமுகமாக விமர்சிக்கிறார் என்று பேசி வருகின்றனர். விஷால் பேசிய அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video.!
Youtube Video Code Embed Credits: News18 Tamilnadu