Categories: சினிமா

மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்த அந்த பெண் யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ இதோ

வெளியிட்டது

மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியான போது கவனம் பெற்று இருக்கிறார் நடிகை விஷ்ணு பிரியா. இவர் instagram மாடல் என்பதும் சில்க் ஸ்மிதா போலவே இவர் பல வீடியோக்களை வெளியிட்டு வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. விஷால் எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியஐ முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருப்பதால் படத்தின் ட்ரைலரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்த அந்த பெண் யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ இதோ 1

இந்த ட்ரைலர் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்த ட்ரைலரில் பல வித்தியாசமான கதையம்சங்கள் இருந்தது. விஷால் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருக்கிறார். டைம் ட்ராவலர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்றால் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா இந்த ட்ரைலரில் காட்டப்பட்டதுதான். சில்க் ஸ்மிதா மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் எப்படி அவரைப் போலவே கொண்டு வந்தனர் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மாடல் விஷ்ணு பிரியா காந்தி என்பவரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

அவரை மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிக்க வைத்து சில கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் செய்து அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே மாற்றி உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. படத்தில் சில்க் ஸ்மிதா தோன்றும் காட்சிகளுக்கு 90ஸ் கிட்ஸ்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கப் போகின்றனர் என்பது சிறிதும் ஐயமில்லை. விஷ்ணு பிரியா காந்தியின் சில வீடியோக்கள் உங்கள் பார்வைக்காக.!

Instagram Video Credits: vishnu priya gandhi

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்