மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய நடிகை.! இனி இவருக்கு பதில் இவர்.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து தற்போது நடிகை ஒருவர் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த செய்தி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் சீரியல்கள் என்றாலே தூர்தஷனும் சன் டிவியும் என்ற நிலைமை இருந்தது. அந்த நிலைமை மாறி தற்போது விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், கலைஞர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி என பல டிவி சேனல்களும் சீரியல்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கியமான தொடர் தான் மீனாட்சி பொண்ணுங்க. கணவனை இழந்த பெண் தன் மூன்று மகள்களை வளர்த்து எப்படி ஆளாக்குகிறார் என்பதுதான் இந்த நாடகத்தின் கதை.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய நடிகை.! இனி இவருக்கு பதில் இவர்.! 1

விளம்பரம்

 

இந்த சீரியலில் ஆரம்பத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மோக்ஷிதா மாற்றப்பட்டு பின்னர் சௌந்தர்யா ரவி நடித்து வருகிறார். பின்னர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ச்சனா மாற்றப்பட்டு தற்போது சிவரஞ்சனி மீனாட்சியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மீனாட்சியின் மூத்த மகளாக யமுனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காயத்ரி யுவராஜ் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இவர் சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த செய்தியை அறிவித்திருந்தார் மேலும் வளைகாப்பு நடத்திய வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  இந்த சீசனின் கடைசி வாக்கெடுப்பு முடிவுகள்.! கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த மாயா - பூர்ணிமா.!

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய நடிகை.! இனி இவருக்கு பதில் இவர்.! 3
இந்த நிலையில் தற்போது காயத்ரி யுவராஜ் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக யமுனா கதாபாத்திரத்தில் நடிகை காவ்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகை காவ்யா ஏற்கனவே சில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததுள்ளது. ஏற்கனவே இரண்டு நடிகைகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்த மாற்றம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.!

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment