இந்தியாவை பாரத் என பெயர் மாற்றுவது குறித்து ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவளித்த சேவாக்கிடம் விஷ்ணு விஷால் தற்போது கேள்வி எழுப்பியிருக்கிறார். “பாரத் என்ற நம் உண்மையான பெயர் திரும்ப கிடைப்பதற்கு நீண்ட காலமாகிவிட்டது” என சேவாக் பதிவிட்டு இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஷ்ணு விஷால் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். தமிழக மற்றும் இந்திய அரசியலில் ஏதாவது பிரச்சனைகள் சுற்றுச் சுழன்று கொண்டே தான் இருக்கிறது. இந்தியாவை பெயர் மாற்றம் செய்வது, ஒரே நாடு ஒரே தேர்தல் என பல அதிரடிகளை இறக்கி வருகிறது மத்திய ஒன்றிய பாஜக அரசு.

இதன் முதல் கட்டமாக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆராய கமிட்டி ஒன்றை நியமித்துள்ளது. இது மட்டுமல்லாமல் டெல்லியில் நடக்க இருக்கும் ஜி20 மாநாட்டிற்கு வெளியான அழைப்புகளில் இந்திய குடியரசு தலைவர் என்ற குறிப்பிடாமல் பாரத குடியரசு தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட பத்திரிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்ததால் தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பதிவிட்டு இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், ” பெயர் என்பது நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும், நாம் அனைவரும் பாரதத்தை சேர்ந்தவர்கள்.

இந்தியா என்பது பிரிட்டிஷ்காரர்கள் நமக்கு கொடுத்த பெயர், நமது உண்மையான பெயர் பாரத் கிடைப்பதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது” என்று பதிவிட்டு இருந்தார். அவருக்கு பதில் அளித்திருக்கும் விஷ்ணு விஷால், மரியாதையுடன் இதை சொல்கிறேன் இந்தியா என்ற பெயர் எத்தனை வருடங்களில் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் “இந்து ராஷ்டிரம்” என மாற்ற வேண்டும் என்று வட இந்தியாவில் பல குரல்கள் எழுந்து வரும் நிலையில், அதற்கு முதல் கட்டமாக பாரத் என்று மாற்ற ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sir with due respect…
The name INDIA didn instill pride in you all these years?? https://t.co/ibm68uZ7e8
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) September 5, 2023
Twitter Original Source From: Vishnu Vishal