Categories: சினிமா

மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்.! மிகுந்த மன உளைச்சலில் விஷ்ணு விஷால் போட்ட பதிவு.!

வெளியிட்டது

விஷ்ணு விஷால் தற்போது ஒரு புதிய ட்வீட் ஒன்றை போட்டுவிட்டு பின்னர் அதை டெலிட் செய்திருக்கிறார். அந்த ட்வீட்டால் தற்போது அவருக்கு இரண்டாவது முறை விவாகரத்தா? என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. வெண்ணிலா கபடி குழு என்கிற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். பின்னர் இவர் குள்ளநரி கூட்டம், ராட்சசன், முண்டாசுப்பட்டி போன்ற பல நல்ல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் ராட்சசன் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. விஷ்ணு விஷால் கடைசியாக நடித்திருந்த படம் கட்டாகுஸ்தி. இந்த திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது அவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் சில படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். மோகன்தாஸ் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்.! மிகுந்த மன உளைச்சலில் விஷ்ணு விஷால் போட்ட பதிவு.! 1
மேலும் தனது மகன் பெயரில் ஆரியன் என்கிற ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் இடம் பொருள் ஏவல் என்கிற படத்திலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் ரஜினி நடராஜன் என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த தம்பதிகளுக்கு ஆரியன் என்கிற மகனும் இருக்கிறார்கள். சில தனிப்பட்ட காரணங்களால் தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தவர் இரண்டாவது ஆக பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா வை திருமணம் செய்து கொண்டிருந்தார். மனைவியை விட்டு பிரிந்தபோதிலும் தனது மகனை அவர் கவனித்துக் கொண்டு வருகிறார். விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டாவும் ஆரியனை அவர் தன் குழந்தை போல பாவித்து வளர்த்து வருகிறார். இவர்கள் மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் துரோகம் குறித்து ட்வீட் ஒன்றை போட்டு இருந்த விஷ்ணு விஷால் தற்போது அந்த பதிவை நீக்கி இருக்கிறார்.

அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில் பரவாயில்லை, நான் மீண்டும் முயற்சி செய்தேன், நான் மீண்டும் தோர்த்துப் போனேன், மீண்டும் பாடம் கற்றுக் கொண்டேன், போன முறை அது என்னுடைய தோல்வியும், அல்ல அது என்னுடைய தவறும் அல்ல, அது துரோகம் மற்றும் ஏமாற்றம் வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள் என்கிற ஹேஷ்டேக்குடன் இந்த பதிவை அவர் பதிவிட்டு இருந்தார். பின்னர் சில நிமிடங்களிலேயே அந்த பதிவை அவர் நீக்கி இருந்தார். இதை பார்த்த விஷ்ணு விஷாலின் ரசிகர்கள் ஜுவாலா கட்டாவுடனும் விவாகரத்து முடிவை எடுத்து இருக்கிறாரா? விஷ்ணு விஷால் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விஷ்ணு விஷாலும் இது குறித்து எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. ட்வீட் போட்ட சில நிமிடங்களில் ட்வீட் மட்டும் டெலிட் செய்யப்பட்டிருப்பதால் ரசிகர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்