“ஏனோ தானோன்னு படத்தை எடுத்து வச்சிருக்காங்க” ‘கேப்டன் மில்லர்’ பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது. “இந்த படம் வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த ஒரு பீரியட் படம். மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை எடுத்துள்ளார்கள். இந்த படத்தின் மேக்கிங், கேமரா ஒர்க், மியூசிக், எடிட்டிங் என தொழில்நுட்ப ரீதியாக அனைத்திலும் அருமையாக வந்திருக்கிறது. தனுஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சமஸ்தானத்தில் ஒரு கிராமம் ஒன்றை காட்டுகிறார்கள். 600 வருடங்களாக ஒரு சிலையை இந்த மக்கள் பாதுகாத்து வருகிறார்கள். இதை வெள்ளைக்காரன் தெரிந்து கொண்டு அந்த சிலையை திருடி கொண்டு சென்று விடுகிறான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஏனோ தானோன்னு படத்தை எடுத்து வச்சிருக்காங்க" 'கேப்டன் மில்லர்' பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.! 1
அதை மீட்க அந்த சமஸ்தானத்தின் ராஜா ஹீரோவை கோர்த்து விடுகிறார். இந்த படத்தில் கதை, திரைக்கதை என எதுவுமே இல்லை. வெறும் மேக்கிங் வைத்துக் கொண்டு மட்டும் என்ன செய்வது? குற்றாலத்திற்கு போய் குழாயில் குளித்து வந்த கதையாக இந்த கதை இருக்கிறது. ஒரு ஸ்ட்ராங்கான வில்லன் கிடையாது. யார் வில்லன் என்பதே தெரியவில்லை. படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட மனதில் நிற்கவில்லை. ஏனோ தானோ என்று வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் போராளியா? கொள்ளை கூட்டமா? என்பது தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் ஒரு துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிவராஜ் குமார் இவர்களைப் பற்றி தெரியாமல் உள்ளே வந்து விட்டார். வடிவேலு வெண்ணிறாடை மூர்த்திக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்த கதை தான். இவர் இதோடு ஒதுங்கிக் கொள்வது நல்லது.

விளம்பரம்
தொடர்புடையவை  வதந்திகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன்..! நடிகை Simran அதிரடி..!

"ஏனோ தானோன்னு படத்தை எடுத்து வச்சிருக்காங்க" 'கேப்டன் மில்லர்' பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.! 3
வெள்ளைக்காரன் காலத்தில் இருக்கும் துப்பாக்கிகள் எப்படி இருக்க வேண்டும்? ஆனால் அவர்கள் இன்றைக்கு இருப்பதைவிட அட்வான்ஸான ஆயுதங்களை வைத்து வெள்ளைக்காரனை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் தனுஷை நடக்க விட்டு அவரை பின்னாலிருந்து ஷார்ட் எடுத்து அதை நிரப்பி விடுகிறார்கள். இந்த படத்தில் ஒரே ஆறுதலான விஷயம். கோவிலுக்கு உள்ளே போவது தான். கோவிலுக்கு உள்ளே நம்மை வரக்கூடாது என்று எந்த சாமி சொன்னது? என்று தனுஷ் பேசும் வசனங்கள் அருமை. இந்த இயக்குனர்கள் ஃபாரின் படம், ஒரியா படம், கொரியா படம், இங்கிலீஷ் படங்களை பார்த்து இரண்டு இரண்டு காட்சிகளை சுட்டு படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும்” என அவர் விமர்சித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment