‘கேப்டன் மில்லர்’ இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நபரை பிடித்து தொகுப்பாளினி தன் காலில் விழ வைத்து அடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், சந்திப் கிஷன், பிரியங்கா மோகன் போன்ற பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் படத்தை தயாரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷ் இந்த படத்திலும் 100 கோடி பட்ஜெட்டை அள்ளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. படத்தில் நடித்த பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி விஜே ஐஸ்வர்யா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கடுப்பான விஜே ஐஸ்வர்யா அவரை தன் காலில் விழ வைத்து தாக்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே ‘சரக்கு’ பட விழாவில் கூல் சுரேஷ் ஐஸ்வர்யாவிற்கு மாலை போட்டது பெரும் சர்ச்சையானது. அப்போது ஐஸ்வர்யா, “இனி தனக்கு இதுபோல் ஒரு சம்பவம் நடந்தால் கண்டிப்பாக அடித்து விடுவேன்” என்று பேசி இருந்தார். அதேபோல நேற்று ‘கேப்டன் மில்லர்’ திரைப்பட வெளியீடு இசை வெளியீட்டு விழாவில் பாலியல் தொல்லை கொடுத்த ரசிகர் ஒருவரை அவர் தாக்கியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Twitter Source From: Christopher Kanagaraj