எப்போதும் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது அவர் அவர் காலகட்டங்களில் நடப்பது மிகவும் அரிதான விஷயமாகவும். 200 படங்கள் மேல் நடித்துள்ள திரு.எம்.ஜி.ஆரும், திரு.சிவாஜி கணேசனும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்தனர். அதன் பின் வந்த ரஜினியும் கமல்ஹாசனும் ஆரம்பகாலங்களில் நிறைய படங்கள் இணைத்து நடித்தாலும் அவரவருக்கென தனியாக மார்க்கெட் உருவாகிய பின்னர் இருவரும் சேர்த்து நடிக்கவே இல்லை. பலரும் இந்த கூட்டணியை வைத்து படம் எடுக்க முயன்று வருகிறார்கள். ஆனால் அது எப்போது கைகூடும் என தெரியவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல அடுத்தக்கட்ட முக்கிய நடிகர்கள் விஜயும் அஜித்தும். சினிமா பின்னனியில் இருந்து வந்தாலும், பல தரப்பட்ட தோல்விகளை சந்தித்து தான் மட்டுமே முயன்று, இன்றுள்ள நிலைக்கு தமிழ் சினிமாவின் முன்னணியில் இருக்கிறார். கலவையான விமர்சனம் பெற்றாலும் இவருடைய படங்கள் எளிதாக 200 கோடி வசூலை தாண்டிவிடுகிறது. பல நல்ல விமர்சங்களை பெற்றாலும் முன்னணி நாயகர்கள் சிலரால் கூட இந்த வசூலை எட்ட முடியாத நிலை உள்ளது. இதற்கு சான்று அண்மையில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயுடன், பூஜா ஹெக்டே, செல்வராகவன்,வி.டி.வி கணேஷ் என பலர் நடித்த இந்த படம் மிகவும் கலவையான விமர்சங்களையே பெற்றது. இருப்பினும் இந்த ஆண்டின் இப்போதைய அதிக வசூல் செய்த தமிழ் படமாக 230 கோடிக்கு மேல் அசால்ட்டாக வசூல் செய்துளளது இந்த படம்.

விஜய் கேரளாவிலும் பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். அதே போல இப்போது தெலுங்கிலும் தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்த அவர் தன்னுடைய அடுத்த படமான “T66” படத்தில் பணியாற்றும் பலரையும் தெலுங்கில் அதிகம் அறியப்பட்டவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குனரான வம்ஷி படிப்பள்ளியுடன் கை கோர்த்துள்ளார் விஜய்.
அதே போல அஜித், எந்தவித பின்னணியும் இல்லாமல் இவரே இந்த மிக பெரிய கடினமான துறையில் நுழைந்து, தனிப்பெரும் ரசிகர் பட்டாளங்கள் கூட்டத்தையும், அசைக்க முடியாத மிக பெரிய மார்க்கெட்டையும் கொண்டுள்ளார். இப்பொது மீண்டும் ஹெச். வினோத், போனி கபூர், தல அஜித் இணையும் 3வது படம் ஹைதராபாத்தில் செட் போடப்பட்டு முன்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளியான “நேர்கொண்ட பார்வை, வலிமை” என இரண்டு படங்களுமே மிக பெரிய வெற்றி படங்கள் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
அதிலும் நீண்ட ஆண்டுகள் கழித்து நெகட்டிவ் ரோலில் தல நடிப்பதாக செய்திகள் வெளியானதால் இன்னும் ரசிகர்கள் ஆர்வமாக படத்தை எதிர்பார்த்து உள்ளனர். படத்திலிருந்து சில அஜித்தின் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது இன்னும் கூடுதல் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.
இவர்களை வைத்து படம் எடுப்பதே நிறைய இயக்குனர்களின் மிக பெரிய கனவாக இருக்கும். அப்படி ஒரு படம் அமைந்தால் அது ரசிகர்களையும், சினிமாவை தொழிலாக கொண்டுள்ளவர்களையும் மிக பெரிய அளவிற்கு ஊக்குவிக்கும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே இருவரும் “ராஜாவின் பார்வையிலே” என்ற படத்தில் இணைத்துள்ளனர். ஆனால் அப்போது இருவரும் சிறிய நடிகர்கள்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு நீண்ட ஆண்டுகளாவே இருவரையும் வைத்து படம் எடுக்க முயன்று வருவதாகவும், அதற்கான தீவிரமான வேலைகளில் அவர் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இது பற்றி அன்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள கங்கை அமரன், முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறியுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு ஏற்கனவே நடிகர் அஜித்திற்கு “மங்காத்தா” என்ற மிக பெரிய பிளாக் பஸ்டர் படம் கொடுத்துள்ளார். விஜய்யும் அஜித்தும் இணைத்து நடித்தால் மிக பெரிய வெற்றியை தாண்டி படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்லாக அமையும், என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது.
Video Courtesy – CommonMan