சூரியவம்சம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை சரத்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சரத்குமார் தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு 1997 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் சூரியவம்சம். இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்க, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். தந்தை மகன் ஆகிய இருவருக்கிடையிலான உறவை மையமாகக் கொண்டு இந்த படம் அமைந்திருந்தது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் நெருடல்கள் பின்னர் காலப்போக்கில் எப்படி மாற்றுகிறது? காதல் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோருக்கு பேரன் பேத்தி பிறந்த பிறகு எப்படி மாற்றம் நடக்கிறது என்பதை அழகான படமாக கொடுத்திருந்தார் விக்ரமன். சரத்குமாரை சுற்றி பல சுவாரசியமான கதாபாத்திரங்களை வடிவமைத்து ஒரு ஃபீல் குட் மூவியாக இந்த படத்தை விக்ரமன் படைத்திருந்தார்.

இதில் சரத்குமார் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பார். முறுக்கு மீசையுடனும் சக்திவேலாகவும், பாவமான மனிதராக சின்ராசராகாவும் நடித்திருப்பார். அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகாவும். மகன் சரத்குமார் ஜோடியாக தேவயானியும் நடித்திருந்தனர். படிக்காத மகனை எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருக்கும் ஒரு முரட்டு அப்பா கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருப்பார். காதலித்து திருமணம் செய்து கொள்ளும் மகனை வீட்டில் இருந்து துரத்தி அடித்து விடுவார், பின்னர் அவர் தன் உழைப்பால் எப்படி உயர்கிறார் என்பது குறித்தும், தன்னை கட்டுப்பாடுடன் வளர்த்த தந்தையால் தான் இவ்வளவு தூரம் உயர்ந்திருப்பதாகவும் சென்டிமென்டால் நம்மை கவர்ந்த ஒரு திரைப்படம் தான் சூரியவம்சம். குறிப்பாக தேவயானி செய்யும் இட்லி உப்புமாவிற்கு இந்த படம் ரொம்ப ஃபேமஸாக ஓடியது. மேலும் மணிவண்ணன், சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பர். மணிவண்ணன் காமெடி இந்த படத்திற்கு ஹைலைட்டாக அமைந்திருந்தது.

தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்த இந்த படம் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 26 ஆண்டுகளை கடந்திருக்கும் இந்த படம் குறித்து சரத்குமார் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில்,”” என்று பதிவிட்டுள்ளார். இதனால் பலரும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.!
கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என… pic.twitter.com/21WTB8X9Gz
— R Sarath Kumar (@realsarathkumar) June 27, 2023