தனது மகளுக்கு முன்னணி நடிகரின் சிலையை பரிசாக கொடுத்த VJ அர்ச்சனா.! பார்த்தவுடன் கதறி அழுத சாரா.!

வெளியிட்டது

விஜே அர்ச்சனா தற்போது தனது மகளுக்கு ஒரு பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். அதை பார்த்து அவர் கண்கலங்கி அழுத்திருக்கிறார். அந்த வீடியோவை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 1990களில் சேட்டிலைட் தொலைக்காட்சிகள் ஆரம்பமான காலத்தில் இருந்தே ஆங்கரிங் தொழிலை செய்து வருகிறார் விஜே அர்ச்சனா. சுமார் 23 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் அவர் கால் பதித்து இருக்கிறார். இவர் முதன்முறையாக 1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சன் டிவிக்கு வந்த அவர் இளமை புதுமை, காமெடி டைம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2004 ஆம் ஆண்டு வினித் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக அவர் திரைத்துறையிலிருந்து விலகி குடும்பத் தலைவியாக செட்டிலானார். சில ஆண்டுகள் மட்டுமே இடைவெளி எடுத்துக் கொண்ட அவர் மீண்டும் திரைத்துறைக்கு திரும்பினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது மகளுக்கு முன்னணி நடிகரின் சிலையை பரிசாக கொடுத்த VJ அர்ச்சனா.! பார்த்தவுடன் கதறி அழுத சாரா.! 1
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு கல்யாணம் என்கிற நிகழ்ச்சியை 2008ஆம் ஆண்டு தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின்னர் ஜீ தமிழுக்கு சென்ற அவர் அதிஷ்ட லட்சுமி என்கிற நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வந்தார். இதுபோன்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஜீ தமிழில் இருந்து விலகி விஜய் தொலைக்காட்சிக்கு வந்த அவர் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அர்ச்சனா பலராலும் விமர்சிக்கப்பட்டார். செயற்கையாக இருக்கிறார் என்ற விமர்சனம் அர்ச்சனா மீது எழுந்தது. மேலும் அன்பு ஜெயிக்கும் நம்புறியா என்று இவர் கேட்டது இணையத்தில் மிகவும் வைரலானது. அன்று தொடங்கி பல கேலிகளுக்கு உள்ளானார் அர்ச்சனா. இவருக்கு சாரா என்கிற மகள் இருக்கிறார். அவரும் அர்ச்சனாவுடன் இணைந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தன் வயதிற்கு மீறி சாரா பேசுவதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர்.


இந்த நிலையில் வாவ் ஃலைப் என்கிற youtube சேனல் ஒன்றை தொடங்கிய அர்ச்சனாவும் சாராவும் பாத்ரூம் டூர் என்கிற வீடியோவை வெளியிட்டனர். அதன் பின்னர் இவர்கள் மீதான விமர்சனம் அதிகமானது. தற்போது இந்த ட்ரோல்கள் அனைத்தும் ஓய்ந்து அர்ச்சனாவும் சாராவும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சாராவுக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர் விஜய் சிலை ஒன்றை அர்ச்சனாவிற்கு பரிசளித்திருக்கிறார். இதை பார்த்த சாரா இதை யார் அனுப்பினார்கள் என்று கேட்டு ஆனந்தத்தில் கதறி அழுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் இந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Silaii.com

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்