ஆல்யா போலவே ராஜா ராணி சீரியலை விட்டு விலகிய விஜே அர்ச்சனா.! இனி இவருக்கு பதில் இவர்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி. இது மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த தொடரில் இருந்து மற்றொரு நடிகை விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹீரோயினுக்கு இணையாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை விஜே அர்ச்சனா. இவர் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராஜா ராணி 1 கொடுத்த வெற்றியை தொடர்ந்து, ராஜா ராணி 2வை எடுத்து வருகின்றனர். இந்த நாடகத்தில் ஆரம்பத்தில் சந்தியாவாக ஆல்யா மானசா நடித்து வந்தார். ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடித்து வருகிறார். ஆல்யாவின் விலகலுக்கு பின்னர் இந்த சீரியலில் டிஆர்பியில் மிகப்பெரிய அடி வாங்கியது. என்றாலும் அர்ச்சனாவின் வில்லத் தனத்திற்காகவே இந்த நாடகத்தை பலரும் விரும்பிப் பார்க்கின்றனர்.

ஆல்யா போலவே ராஜா ராணி சீரியலை விட்டு விலகிய விஜே அர்ச்சனா.! இனி இவருக்கு பதில் இவர்.! 1

ராஜா ராணி முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்து வந்த ஆல்யா இரண்டாவது பாகத்திலும் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த அவர், குழந்தை பிறக்கும் கடைசி மாதம் வரையும் நடித்துக் கொடுத்தார். பின்னர் குழந்தை பிறந்ததால் சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார். இவர் விலகலுக்குப் பின்னர் நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் சற்று அடி வாங்கியது. இருந்த போதிலும் அர்ச்சனாவின் வில்லத்தனத்திற்காக பலரும் இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்தனர். இதில் அர்ச்சனா, ஹீரோவின் தம்பியான செந்திலுக்கு மனைவியாக நடித்து வந்தார். அதாவது சிவகாமிக்கு இரண்டாவது மருமகள் ரோலில் நடித்து வருகிறார். வீடியோ ஜாக்கியாக இருந்து வந்த அர்ச்சனா இந்த சீரியல் மூலம் நடிகையாக முதன் முதலில் நடிக்க தொடங்கினார். முதல் சீரியலிலேயே அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும் விஜய் டிவியின் சிறந்த வில்லிக்கான விருதையும் கைப்பற்றினார்.

இந்த நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு விலகி இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அர்ச்சனாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா அருண் பிரசாத்தும் ஏற்கனவே காதலிப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் திருமணத்திற்காக விலகி இருக்க கூடும் என்று வெளியில் பேசப்பட்டு வருகிறது. மேலும் அவருக்குப் பதில் ஈரமான ரோஜாவே புகழ் அர்ச்சனா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்