ராஜா ராணி 2 சீரியல் இருந்து தற்போது விலகி இருக்கும் விஜே அர்ச்சனா, பிக்பாஸில் கலந்து கொள்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு தற்போது பதில் அளித்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி. இந்த தொடர் தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கதாநாயகனின் தம்பி ஆதி ஒரு பெண்ணை காதலித்து, அவர் கர்ப்பம் ஆகி விடுகிறார். அவரது திருமணத்திற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கதாநாயகனின் அப்பாவும், கதாநாயகன் சரவணனும் இணைந்து நாடகமாடி அந்த திருமணத்திற்கு ஒப்புதல் வாங்கி விட்டனர். இப்படி தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், திடீரென வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த விஜே அர்ச்சனா திடீரென ஒரு நாள் நாடகத்திலிருந்து விலகினார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஏற்கனவே சீரியலின் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஆல்யா மானசா ஒரு நாள் நாடகத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் நாடகத்தில் தொடர முடியாது என்று நாடகத்தை விட்டு விலகினார். அப்போது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டில் சிறிது அடி வாங்கியது. பின்னர் அந்த கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் நடித்த வருகிறார். இருந்த போதிலும் வில்லி அர்ச்சனா செய்யும் வில்லத் தனங்களுக்காகவே இந்த சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென ஒரு நாள் அர்ச்சனாவும் நாடகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த அவர், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதால் நாடகத்திலிருந்து விலகி விட்டதாக விளக்கம் அளித்து இருந்தார்.
தற்போது பேட்டி ஒன்று அளித்து இருக்கும் அர்ச்சனா, ராஜா ராணி சீரியல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஓடும் என்று தெரியாது. மூன்று ஆண்டுகள் நான் அந்த நாடகத்தில் பயணித்து விட்டேன். இனி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்து விட்டேன் என்று கூறினார். அப்போது அவரிடம் நீங்கள் பிக்பாஸ் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். அது உண்மையா? என்று கேட்க அது உண்மையா? இல்லையா? என்பது சில நாட்களில் தெரியவரும். பொறுத்திருந்து பாருங்கள். பிக்பாஸில் கலந்து கொள்கிறேனா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சூசகமாக பதில் அளித்தார். சில நாட்களாகவே அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவரின் பேட்டி வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அவரின் முழு பேட்டியை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Little Talks