Categories: சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படம்.! ‘மகாராஜா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.!

வெளியிட்டது

விஜய் சேதுபதி நடித்து வரும் ஐம்பதாவது படத்தின் முதல் பார்வையை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த புகைப்படத்திற்கு தற்போது பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் குழு நடிகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். பல படங்களில் வில்லனாகவும் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் அவர் தற்போது தனது ஐம்பதாவது திரைப்படமாக ‘மகாராஜா’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படம்.! 'மகாராஜா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.! 1

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு விதார்த், பாரதிராஜா போன்ற பலரின் நடிப்பில் வெளியான ‘குரங்கு பொம்மை’ என்கிற படத்தை இயக்கியவர் தான் நித்திலன் சுவாமிநாதன். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் ஆறு ஆண்டுகள் கழித்து முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதி தற்போது ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து முடித்திருக்கும் நிலையில் தனது 50வது படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதில் முடி திருத்தம் செய்யும் கடையில் கையில் பட்டாகத்தி உடன் காதில் இரத்தம் ஒழுக பஞ்சுடன் அமர்ந்திருப்பது போலவும், அந்த கட்டிடம் உடைந்து இருக்கிறது அவருக்கு பின்னால் போலீசிலர் நின்று கொண்டிருப்பது போலவும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக வெளியாகி இருக்கிறது. பலரும் விஜய் சேதுபதியின் இந்த புது படத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்