இயக்குனர் கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும். வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர். சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு” என பல வெற்றி படங்களை கொடுத்தவர். மங்காத்தாவில் நடிகர் அஜித்தை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டி, மிக பெரிய வெற்றியை பெற்றவர் கொஞ்சம் சறுக்கல்களுக்கு பிறகு இப்பொது மீண்டும் சிம்பிற்கு மட்டுமில்லாமல் தனக்கும் ஒரு மிக பெரிய ரீ-என்ட்ரியை “மாநாடு” படத்தின் மூலம் பெற்றுள்ளார்.

இவருடைய தம்பி பிரேம்ஜி, பெருமபாலும் அண்னன் படங்களில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துவிடுவார். அவ்வப்போது சில மற்ற இயக்குனர்கள் படங்களிலும் நடிப்பது உண்டு. இவர்கள் இரண்டு போரையும் வைத்து பல மீம்ஸுகள் வந்துள்ளன. வெங்கட் பிரபு கதையே இல்லாமல் கூட படம் எடுப்பார், ஆனால் தம்பி பிரேம்ஜி இல்லாமல் எடுக்கமாட்டார் என்ற அளவிற்கு தான் இயக்கிய படங்களில் இவர் பிரேம்ஜிக்கு முக்கிய பாத்திரம் கொடுப்பார்.
எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் என்றால் அது நடிகர் பிரேம்ஜி தான். ஆனால் அப்படி இருக்கும் இவர் நமது தமிழ் நடிகைகள் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து பல காமெடி எமோஜிகளை அனுப்புவதை வழக்கமாகவே வைத்துள்ளார். சமீபத்தில் இவர் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு வீடியோ பதிவு ஒன்று ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதில் ‘தர்மதுரை’ படத்தில் ரஜினி மற்றும் பிரபுவிற்கு இடையை வரும் காட்சியை மற்றும் இருவரும் நடித்துள்ளார். அதில் வெங்கட் பிரபு கையில் மதுபான பாட்டிலை தனது தம்பி பிரேம்ஜிக்கு அளிகின்றார். இதனை பார்த்த சமூகவலைத்தளவாசிகள் பலரும், இந்த மாதிரி வீடியோலாமா வெளியிடுவீர்கள், உங்க அளப்பறைக்கு அளவே இல்லையா என கமென்ட் செய்து வருகிறார்கள்.
இவர்கள் மிக நெருக்கமானவர்கள் என்றாலும் இது போன்ற விடியோக்களை,சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவர்கள் மேல் போது வெளியில் இருக்கும் நற்பெயரை கெடுக்கும் அளவிற்கு உள்ளது என்பதே நிதர்சனம்.
மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய “மன்மத லீலை” என்ற படம் அடல்ட் கன்டென்ட் கொண்டதால் தோல்வியையே தழுவியது. அடுத்ததாக வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை கூறி, அவரும் ஓகே செய்து விட, அந்த பணிகளில் இறங்கியுள்ளார் என கூறப்படுகிறது.