அனிருத்தை திருமணம் செய்து கொள்வேன்..! அதற்கு காரணம் இதுதான்..வைரலாகும் ஜோனிதா பேட்டி

திருமணம் செய்தால் அனிருத்தை திருமணம் செய்துகொள்வேன் அதுக்கு ஒரு காரணம் இருக்கு என்று பிரபல பிண்ணனி பாடகி ஜோனிடா காந்தி அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக அனைவரும் ரசித்து கேட்ட பாடல் என்றால் அது அரபிக் குத்து தான். பீஸ்ட் படத்தில் வந்த அந்த பாடலை பாடியவர் ஜோனிடா காந்தி. அனிருத் இசையில் அமைந்திருந்த அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். ஜோனிடா காந்தி அடிப்படையில் ஒரு இந்தோ – கனடிய பாடகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளில் பாடியுள்ளார். சமூக வலைத்தளங்கில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜோனிதா பல கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதுண்டு. இதனால் இவரை பின்தொடர்பவர்கள் அதிகம்.

அனிருத்தை திருமணம் செய்து கொள்வேன்..! அதற்கு காரணம் இதுதான்..வைரலாகும் ஜோனிதா பேட்டி 1

விளம்பரம்

டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் 7 வயதாக இருக்கும் போதே கனடா சென்றுவிட்டார். ஆனாலும் அங்கிருந்தபடியே இசையைக் கற்றுக் கொண்டு இசைக் கலைஞராக வலம் வந்தார். முதலில் இவர் தான் பாடிய பாடல்களை இணையத்தில் பதிவேற்றி வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் சென்னை எக்பிரஸ் என்னும் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே இவர் திரை உலகில் பாடகியாக அறிமுகம் ஆகும் வாய்ப்பை இவருக்கு கொடுத்தது.

தொடர்புடையவை  ஏன் எல்லாரும் அப்படி பாக்குறீங்க..! விவாகரத்துக்கு பின் வெளியான JayamRavi முதல் வீடியோ..!

அனிருத்தை திருமணம் செய்து கொள்வேன்..! அதற்கு காரணம் இதுதான்..வைரலாகும் ஜோனிதா பேட்டி 3

விளம்பரம்

ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு ஹிந்தி பாடலை பாடினார். பின்னர் ஓகே கண்மணி படத்தில் பாடலைப் பாடினார். பின்னர் அனிருத் இவருக்கு பல படங்களில் பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். இறைவா, செல்லம்மா செல்லம்மா, அரபிக்குத்து போன்ற பாடல்கள் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. இவர் அரபிக் குத்து லிரிக் வீடியோவில் தோன்றி ஆடியதால் ரசிகர்கள் ஆதரவு பெருகியது. தற்போது அவர் ஒரு பேட்டியின் போது மூன்று பெயரை சொல்லி இதில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டதற்கு அனிருத் என்று கூறிவிட்டு, அனிருத் மட்டும் தான் திருமணம் செய்யவில்லை அதனால் தான் அவர் பெயரை சொன்னதாக அதற்கான காரணத்தையும் கூறினார். மேலும் ரன்வீர்சிங் கையில் முத்தமிட விரும்புவதாகவும், சூர்யாவின் மிகப்பெரிய fan என்றும் கூறினார்.

விளம்பரம்

Leave a Comment