Categories: சினிமா

பான் இந்தியன் படம் பாத்துருப்பீங்க, நா பான் இந்தியன் ரவுடி மிரட்டும் ராம் பொத்தினேனியின் வாரியர் பட டீஸர்| Ram Pothineni|Krithi Shetty|Adhi Pinshetty|Linguswamy.

வெளியிட்டது

பான் இந்திய படங்களின் மூலம் தமிழ் திரைக்கு வரும் அடுத்த தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி. தமிழ் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் இந்த படத்தில் ராமுடன் இணைந்து நடிகை கிருதி ஷெட்டி, ஆதி போன்றோர் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.டீஸர் லிங்க் கீழே.

பான் இந்தியன் படம் பாத்துருப்பீங்க, நா பான் இந்தியன் ரவுடி மிரட்டும் ராம் பொத்தினேனியின் வாரியர் பட டீஸர்| Ram Pothineni|Krithi Shetty|Adhi Pinshetty|Linguswamy. 1

இன்று தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடும் ராம் பொத்தினேனிக்கு பரிசாக இந்த டீஸர் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக தோன்றும் ராம் கனகச்சிதமாக அந்த பாத்திரத்துக்கு பொருந்துகிறார். அரசியல் வில்லனாக வரும் ஆதி மிரட்டுகிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு பாடிய புல்லட் சாங் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ராம் நல்ல வெற்றியை குறிவைத்துள்ளார். படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்