
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும் பரவலாக மழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே வருகிறது.
இதனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 37வது நாளாக 120 அடியாக உயர்ந்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் நீர்இருப்பு 93.4 டி.எம்.சி.யாக உள்ளது. இதேபோன்று, அணைக்கு நீர்வரத்து 4,660 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 4,400 கனஅடியாகவும் உள்ளது.