புதிதாக பரவி வரும் கொரானா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு புதிய நோயான கொரானா வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், பொது சுகாதார அவரச நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து, சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவாசுன்யின் கூறுகையில், “மக்களின் உடல்நலம் குறித்து சீனா அரசு பல்வேறு நடவடிக்கைகளை வருகிறது. முழுமையான மற்றும் கட்டுப்பாடான நடவடிக்கைகளை சீனா அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்தும் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருக்கிறது” என கூறியுள்ளார்.