Categories: சினிமா

திருவிழா போல வெளியான விசில் போடு பாடல் வீடியோ..! கொண்டாடும் Thalapathy ரசிகர்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உள்ளது. பிற நடிகர்களுக்கு தங்களது படம் நூறு கோடியை தொடுவது கனவாக இருக்கும் நிலையில், தளபதி விஜய் படத்தின் ஒரு நாள் வசூல் தான் நூறு கோடியாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம் ,தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை கொண்டு இருக்கிறார்.

திருவிழா போல வெளியான விசில் போடு பாடல் வீடியோ..! கொண்டாடும் Thalapathy ரசிகர்கள்..! 1

இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்று இருந்த விசில் போடு பாடல் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று இருந்தது. ரசிகர்கள் வேண்டுகோளுக்காக தற்போது இப்பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர். யூடியுபில் இப்பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Embed Video Credits : T series tamil

வெளியிட்டது

புதிய செய்திகள்