Categories: சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெயர் வச்சது யாரு?

வெளியிட்டது
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெயர் வச்சது யாரு? 1

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் நடிகை நயன்தாரா. அவருடைய உண்மையானப் பெயர் டயானா மரியம் குரியன். மனசினக்கரே என்ற படத்தின் மூலம்தான் அவர் நடிகையாக அறிமுகமானார்.

அப்படத்தில் டயானாவுக்கு நயன்தாரா என்று நான்தான் பெயர் வைத்தேன் என அப்பட இயக்குநர் ஜான் டிட்டோ ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். ஆனால் அதற்கு இயக்குநர் சத்யன் அந்திக்காடு மறுப்பு தெரிவித்து. நயன்தாரா என்ற பெயரை சூட்டியது ஜான் டிட்டோ கிடையாது. நானும், இயக்குநர் ரஞ்சன் பிரமோதும்தான் நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்து பரிதுரைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், யார் பெயரை வைத்திருந்தாலும் நயன்தாராவிற்கு அந்த பெயர் சினிமாவில் ராசியாக அமைந்து விட்டது. ஆனால் நிஜவாழ்க்கையில் அவருக்கு பல தோல்விகளை தந்திருக்கிறது என்று ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்