கமல் படத்தில் வில்லியாக உருவெடுக்கும் காஜல் அகர்வால்!!

கமல் படத்தில் வில்லியாக உருவெடுக்கும் காஜல் அகர்வால்!! 1

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் 2 மாதங்களுக்கு முன் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்தியன் தாத்தா தோற்றத்தில் அவர் நடித்த பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் அவர் காலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆபரேஷன் செய்துகொண்டு ஓய்வு எடுத்தார்.

சுமார் 1 மாதத்திற்கு மேலாக ஓய்வில் இருப்பதால் இந்தியன் 2 படம் ரிலீஸ் குறித்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது திட்டமிட்டபடி வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

விளம்பரம்

ஓய்வில் இருந்து வரும் கமல்ஹாசன் இதுவரை இந்தியன் 2 படம் குறித்தும் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்பது பற்றியும் முடிவு அறிவிக்காமல் உள்ளார். அவர் இல்லாத பல காட்சிகளை ஷங்கர் படமாக எடுத்து வந்தாலும் அடுத்து கமலுடன் முக்கிய கதாபாத்திரங்களை இணைத்து காட்சிகளை படமாக்க உள்ளார்.

எப்படியும் வரும் பிப்ரவரி மாதம் கமல் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று படக்குழுவினர் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விளம்பரம்

நடிகை காஜல் அகர்வால் கமல்ஹாசனுக்கு வில்லியாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் கசிந்து இருக்கிறது. இது தொட‌ர்பாக காஜல் அகர்வால் அளித்த பேட்டியில் ,’இந்தியன் 2 படத்தில் எனது கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. வில்லியாக நடிக்கிறேனா அல்லது வேறு கதாபாத்திரமா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக பேசப்படும் கதாபாத்திரமாக எனது வேடம் இருக்கும்’ என்றார்.

விளம்பரம்

Leave a Comment