தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. சரத்குமருடன் “ஐயா” படத்தில் 2003ஆம் ஆண்டு அறிமுகமான இவர் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என இங்குள்ள முன்னணி நாயகர்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு மலையாள மொழி முன்னணி நாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அது மட்டுமின்றி கதையின் நாயகியாக இவர் நடித்த சில படங்களும் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் மேல் தமிழின் முன்னணி நாயகியாக இவர் திகழ்ந்து வருகிறார்.

நானும் ரவுடி தான் படம் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட பழக்கம் பின்நாளில் காதலாக மாறி இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். இது அனைவர்க்கும் தெரிந்ததே. பின்னர் இருவரும் இணைந்து “ரௌடி பிக்சரஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி அதிலும் வெற்றிகண்டுள்ளார்.
இப்பொது அண்மையில் வெளியான “காத்துவக்குல ரெண்டு காதல்” படமும் இவர்களுக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்துள்ளது. நீண்ட காலமாக இவர்களது திருமண தேதி எப்போது எப்போது என ஊடகவியலாளர்களும், ரசிகர்களும் பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் ஜூன் 9ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் திருமணம் செய்ய உள்ளனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட ஒருசில அரசியல்வாதிகளுக்கும் பல திரையுலக பிரமுகர்களுக்கும் ஏற்கனவே திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் குறித்த சில தகவல்கள் ஊடகங்களில் கசிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாபலிபுரத்தில் வங்கக்கடல் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மண்டபத்தில்தான் விக்கி-நயன் திருமணம் நடைபெற இருப்பதாகவும், முகூர்த்த நேரம் சரியாக காலை 08.30 மணிக்கு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திருமணத்திற்காக மூன்று நாட்கள் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மெஹந்தி உள்பட அனைத்து சடங்குகளும் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் பிரபலங்களான அனுஷ்கா சர்மா. காத்ரீனா கைப் ஆகியோர்களின் திருமணம் போன்று பிரமாண்டமாக இந்த திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திருமண வீடியோவை கவுதம் மேனன் இயக்க இருப்பதாகவும் இந்த திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.