Categories: அரசியல்

வன்முறைகள் நிறுத்தப் பட்டால் மட்டுமே வழக்கை ஏற்றுக் கொள்ள முடியும்: உச்சநீதிமன்றம்

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டத்தை நிறுத்தினால் மட்டுமே வழக்கை விசாரிக்க முடியுமென உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

வன்முறைகள் நிறுத்தப் பட்டால் மட்டுமே வழக்கை ஏற்றுக் கொள்ள முடியும்: உச்சநீதிமன்றம் 1
குடியுரிமை திருத்த சட்டத்தை விசாரணை செய்யும் உச்ச நீதிமன்றம்

சமீபத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றி இருந்தது பாஜக அரசு. இதனால் அதிருப்தியடைந்த வடகிழக்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு மத்திய அரசு துப்பாக்கி முனையில் மக்களை கையாண்ட விதம், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை போராட தூண்டியது. அவர்கள் நடத்திய பேரணியில் கலவரம் வெடிக்கவே காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது. இந்த விவகாரம் நாடுமுழுக்க பரபரப்பை ஏற்படுத்தவே, மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் நாடு முழுக்க பல தலைநகரங்கள் நிலைகுலைந்தது. மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில், பொது மக்கள், கட்சிகள், சமூக அமைப்புகள் ஒன்றிணையவே போராட்ட வலுப்பெற்றது. தற்போது போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக பட்டியலிட்டு உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நாட்டில் பல்வேறு இடங்களில் நிகழும் வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்