Categories: சினிமா

அஜித் படத்தில் இலியானா நடிக்கவுள்ளாரா?

வெளியிட்டது
அஜித் படத்தில் இலியானா நடிக்கவுள்ளாரா? 1

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின்னர் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனரான வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். அதிக சண்டை கட்சிகளுடன் படமாக தயாராகும் இந்தப் படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒன்று போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் தனது தோற்றத்தை போலீஸ் அதிகாரி வேடத்துக்காக இளமையாக மாற்றி இருக்கிறார். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இப்படத்தில் இடம்பெறுகின்றன. அஜித் ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழுந்த வண்ணம் இருந்தன. நயன்தாரா, நஸ்ரியா பெயர்கள் முதலில் அடிபட்டது.

அனால் சில நாட்களுக்கு முன்பு யாமி கவுதமிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. யாமி கவுதம் தமிழில் ஜெய்யுடன் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் மற்றும் கவுரவம் படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இலியானாவிடமும் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு என்று தகவல் கசிந்துள்ளது.

இலியானாஅஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு வேடமா? என்பது பற்றி தெரியவில்லை. இவர் ஏற்கனவே விஜய் நடித்த நண்பன் படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். வலிமை படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்