பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை! குறைத்தது டெல்லி அரசு!!

பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை! குறைத்தது டெல்லி அரசு!! 1

காற்று மாசு காரணத்தினால் இழந்த வேலை நாட்களை ஈடுகட்ட, பள்ளிகளுக்கு விடப்படும் குளிர்கால விடுமுறையை டெல்லி அரசு குறைக்க உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி அன்று, காற்று மாசு குறியீட்டின் அளவு உட்சத்தை அடைந்தது நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளை எட்டியது. இதனால் காற்று மாசு இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை அடைந்துள்ளது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை அடைந்தனர்.குழந்தைகளுக்கு வேகமாக சுவாசிக்கும் திறன் இருப்பதால், குழந்தைகளின் உடல்நலன் குறித்துப் பெற்றோர் அனைவரும் கவலையடைந்தனர். அதன் பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

விளம்பரம்

இந்நிலையில் இழந்த வேலை நாட்களை ஈடுகட்டும் வகையில், குளிர்கால விடுமுறையைக் குறைக்க டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. வழக்கமாக அரசுப் பள்ளிகளில் டிசம்பர் 28 முதல் ஜனவரி 15 வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். எனினும் இம்முறை விடுமுறையைக் குறைத்து கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தொடர்புடையவை  சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

அதன் அடிப்படையில், ”6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை விடுமுறை விடப்படுகிறது. மழலையர் கல்வி முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, டிச.28 முதல் ஜன.15 வரை விடுமுறை இருக்கும்.நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாகவும் ஜூலையில் உருவான வெப்ப அலைகள் காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடுகட்டவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment