Categories: சினிமா

விக்ரம் படத்தால் மீண்டும் தள்ளி போனது யானை திரைப்படம்..எப்போ வெளியாகுது தெரியுமா? இத்தனை நாளுக்கு அப்புறம் தான் ரிலீஸா?

வெளியிட்டது

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை திரைப்படம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. விக்ரம் படம் கொடுத்த வெற்றியால் மற்ற படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதில் முதலாவதாக அருண் விஜயின் நடிப்பில் உருவாகியிருக்கும் யானை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கமலஹாசனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ள ஒரு படமாக விக்ரம் படம் உள்ளது. வார நாட்கள், வார இறுதிநாட்கள் என்று தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன. உலகம் முழுவதும் ஜூன் 3ம் தேதி வெளியாகி 9 நாட்களில் சுமார் 300 கோடி வசூலை அள்ளி குவித்திருக்கும் படமாக விக்ரம் உள்ளது. இது அஜீத், விஜய் போன்ற முண்ணனி நடிகர்கள் கூட செய்யாத சாதனையாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தால் மீண்டும் தள்ளி போனது யானை திரைப்படம்..எப்போ வெளியாகுது தெரியுமா? இத்தனை நாளுக்கு அப்புறம் தான் ரிலீஸா? 1

தற்போது இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் அருண் விஜய் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாக இருந்த யானை திரைப்படம் தள்ளி போகும் என்று தெரிகிறது. யானை படத்தை இயக்குனர ஹரி இயக்கி இருந்தார். இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மிகப் பெரிய பட்ஜெட்டில் யானை படம் எடுக்கப்பட்டுள்ளது. விக்ரமின் மாஸ் வெற்றியால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வீட்டுல விசேஷம் படமும் அதே தேதியில் வெளியாகிறது.

இதனால் இவ்வளவு பொருட்செலவில் படம் எடுத்துவிட்டு குறைந்த தியேட்டர்களில் படத்தை வெளியிட்டால் எதிர்பார்த்த அளவு வசூல் இருக்காது என்று படத்தின் விநியோகஸ்தர்கள் கருதுகின்றனர். இதனால் படத்தின் வெளியீட்டை ஜூலை 1ம் தேதிக்கு மாற்றி வைக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த செய்தி நேற்று பரவிய நிலையில் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 1ம் தேதி படம் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்