
அண்மையில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் தாக்கம் ரசிகர்களிடம் பெரிதும் பார்க்க படுகிறது. படம் வெளியான 5 மொழிகளையும் சேர்த்து உலகளவில் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி படமாக அண்மை காலத்தில் உருவெடுத்துள்ளது. பலரும் படத்தை பார்த்து நடிகர் யாஷின் ரசிகராக மாறிப்போயுள்ளனர். பலர் ரீல்ஸ் செய்தும் வருகின்றார். இந்நிலையில் இப்படம் சண்டை பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்டது போல ரசிக்க வைத்தது.இந்த படத்தினை பார்த்து சிறுவன் ஒருவர் செய்த செயலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் 2 நாட்களில் 3 முறை கேஜிஎப் 2 படத்தினை பார்த்திருக்கிறார். படத்தில் நடிகர் யாஷ் அதிக காட்சிகளில் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் . ஏனோ அதீத ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டே புகைத்து தள்ளி உள்ளன
.இதனால் சிறுவனுக்கு தொண்டை வலி ஏற்பட்டு,மூச்சுத்திணறல் ஆகி ஆபத்தான நிலையில் ஐதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது.
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ கூறியதாவது,சிறுவன் ஒரே நேரத்தில் முழு சிகரெட் பாக்கெட்டையும் புகைத்துள்ளதால் கடுமையாக நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது, தற்போது உடல் நிலை தெரி வருகிறார்.
நம் ஊர் நாயகர்கள் பலரும் புகை பிடிப்பது, இல்லை மது அருந்துவது போன்ற காட்சிகளில் பெரும்பாலும் நடிப்பதில்லை. ரஜினியை பின்பற்றி இங்கு புகைத்தவர்கள் அதிகம். ஆனால் அந்த பழக்கத்தை அவர் கைவிட்டுவிட இப்பொது எதனை பேர் அதே போல் விட்டுவிட்டார்கள் என தெரியவில்லை. இது நடிப்பவர்கள் தவறில்லை, அது அவர்களுடைய தொழில், காசு வாங்கி கொண்டு அவ்வாறாக சோதித்து போகின்றனர். பெற்றோர்கள் கண்டிப்பாக இருந்தும் சிறுவர்களும், இளம் தலைமுறைகளும் இவ்வாறு சீர் அழிவது தொடர் கதையாக இருந்து வருகிறது.