அப்பா நீங்க ஒரு தெய்வ குழந்தை, உங்களுக்கு மகளாக பிறந்தது நினைத்து பெருமைபடுகிறோம்

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கு ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் ஆரம்பத்தில் கர்நாடக மாநிலத்தில் ஒரு பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சினிமா துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கையில் இருந்த காசை எடுத்துக் கொண்டு, ரயிலில் புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தார். வீட்டிற்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி வந்ததாக அவரே சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். அப்படி கையில் காசு இல்லாமல் இருந்தபோதிலும் தன்னுடைய லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஸ்டுடியோவாக ஏறி இறங்கி வேலை கேட்டு வந்தார். ஆனால் யாரும் வேலை கொடுக்கவில்லை பின்னர் 1975 ஆம் ஆண்டில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் ரஜினிகாந்தை அபூர்வராகங்கள் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த படத்திற்கு பின்னர் அவர் தொட்ட ஒவ்வொரு படங்களும் வெற்றி படங்களாகவே அவருக்கு அமைந்தது.

அப்பா நீங்க ஒரு தெய்வ குழந்தை, உங்களுக்கு மகளாக பிறந்தது நினைத்து பெருமைபடுகிறோம் 1

விளம்பரம்

தனது திறமைக்கு முதன்முதலாக அங்கீகாரம் கொடுத்து, தான் இந்த அளவுக்கு உயர்வதற்கு காரணமாக இருந்த பாலச்சந்திரன் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொண்டார் ரஜினி, அன்று தொடங்கி இன்று வரை 168 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவர் அடுத்தபடியாக 169 படத்தில் இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார். 1975 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அவர் 47 வருடங்களாக திரை துறையில் பயணித்து வருகிறார். குணச்சித்திர வேடங்கள் வில்லன் வேடங்கள், ஹீரோ என பல வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் ரஜினிகாந்த். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய முடியை ஸ்டைலாக கோதும் அழகை பார்ப்பதற்கே பல ரசிகர்கள் உண்டு. அவர்களும் ரஜினிகாந்த் போலவே தங்களது சிகையை அலங்காரம் செய்து கொண்டு வலம் வந்த காலங்களும் உண்டு.

தொடர்புடையவை  1 மணி நேரத்தில் யாராலும் செய்ய முடியாத சாதனையை படைத்த "வாரிசு-ரஞ்சிதமே" பாடல் ப்ரோமோ.!

அப்பா நீங்க ஒரு தெய்வ குழந்தை, உங்களுக்கு மகளாக பிறந்தது நினைத்து பெருமைபடுகிறோம் 3 அப்பா நீங்க ஒரு தெய்வ குழந்தை, உங்களுக்கு மகளாக பிறந்தது நினைத்து பெருமைபடுகிறோம் 5

விளம்பரம்

அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாரின் 47-வது ஆண்டு திரைப்பயணம் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி அவரது மகள்களான சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறும் பொழுது உங்களுக்கு மகளாக பிறந்தது என் பாக்கியம், அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் அப்பா என்று ட்விட்டரில் ரஜினி வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.்மேலும் எங்கள் வீட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் என்றும் அவரை குறிப்பிட்டு இருந்தார். அவரின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் நீங்கள் ஒரு கடவுளின் குழந்தை, தெய்வக் குழந்தை லவ் யூ தலைவா என்று பதிவிட்டு இருக்கிறார். மகள்களின் இந்த வாழ்த்தால் மிகுந்து போயிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

அப்பா நீங்க ஒரு தெய்வ குழந்தை, உங்களுக்கு மகளாக பிறந்தது நினைத்து பெருமைபடுகிறோம் 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment