Categories: சினிமா

“அப்படியே அண்ணனா மாறியே இருக்காங்களே….லொள்ளு பேசும் யோகிபாபுவின் பேசவே கூச்சபடும் தங்கை”

வெளியிட்டது

தமிழ் சினேம்வின் தற்போதைய Most Wanted நடிகர் யோகி பாபு. சின்னத்திரையில் துவங்கிய இவருடைய மீடியா பயணம் இப்பொது வெள்ளித்திரையில் மிக பெரிய நட்சத்திரமாக மின்னி வருகிறார். காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகன், துணை கதாபாத்திரம், முக்கிய கதாபாத்திரம் என நடித்து அசத்தி வருகிறார். அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான “மண்டேலா” படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது.

"அப்படியே அண்ணனா மாறியே இருக்காங்களே....லொள்ளு பேசும் யோகிபாபுவின் பேசவே கூச்சபடும் தங்கை" 1

தற்போது தமிழில் மட்டும் அறை டஜன் படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் யோகிபாபு தன்னுடைய சொந்த, தனிப்பட்ட வாழ்க்கையை மீடியா கண்ணில் இருந்து கொஞ்சம் தள்ளியே வைத்துள்ளார். குறிப்பாக அவருடைய மனைவியை தவிர மக்களுக்கு அவருடைய குடும்பத்தார் யாருமே மீடியா வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சமீபத்திய வீடியோ ஒன்றில் அவரின் குடும்பத்தார் பற்றி விஷயங்கள் வெளிவந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல்நாகரம்மேடு என்னும் ஊரிலுள்ள யோகிபாபுவின் குடும்பத்திற்கு சொந்தமான கோவில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள வாராகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுள்ளது. இதில் அவரது தங்கை செண்பகமும், அவருடைய கணவர் திரு. நீலகண்டனும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் தற்போது தன்னுடைய பேச்சால் அனைவரையும் கலக்கி வரும் யோகிபாபுவின் தங்கையோ மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக உள்ளார்.  நெறியாளர் மைக்கை கொடுத்து “நீங்கள் உங்களை பற்றி பேசுங்கள்” என கூற, “அய்யொ அண்ணா எனக்கு உடம்பு ஓத்துருது அண்ணா” என மிகவும் கூச்சமாக பேசுகிறார். பிறகு “வணக்கம், என் பெயர் செண்பகம், நான் பாபு அண்ணாவோட தங்கச்சி” என மட்டுமே கூறிவிட்டு மைக்கை திரும்ப கொடுத்துவிட்டு தனக்கே உரிய பாணியில் அழகாக சிரிக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்