சஸ்பென்ஸுடன் வெளியாகியுள்ள சூர்யாவின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!! மாஸான அறிவிப்பை வெளியிட்டுள்ள விக்ரம் படக்குழு!!!

நடிகர் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், செம்பன் வினோத் என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “விக்ரம்”. லோகேஷ் கனகராஜ் “மாஸ்டர்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படத்தை இயக்கியுள்ளார். மிக பெரிய பிரமாண்ட செலவில் கமலின் “ராஜ் கமல் பிலிம்ஸ்” சார்பில் இந்த படம் தயாராகியுள்ளது.

கமலின் 4 வருட சினிமா இடைவேளைக்கு பிறகு, மிக பெரிய எதிர்பார்ப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. நீண்ட ஆண்டுகளில் கமலின் மிகவும் எதிர்பார்க்கபப்டும் படமாக இது உள்ளது. வருகிற வெள்ளி அன்று படம் திரையரங்குல்களில் வெளியாக உள்ளது.

விளம்பரம்

சஸ்பென்ஸுடன் வெளியாகியுள்ள சூர்யாவின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!! மாஸான அறிவிப்பை வெளியிட்டுள்ள விக்ரம் படக்குழு!!! 1

அனிருத் இசையில் கமல் எழுதி, பாடிய “பத்தல பத்தல” பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் ட்ரைலரும், மற்ற பாடல்களும் வெளியாகி ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய இயக்குனர் லோகேஷ்,  இப்படத்தில் பல்வேறு ஆச்சர்யம் அளிக்கும் விஷயங்கள் உள்ளது என சொல்லி வருகிறார். அதன்படி விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளார் என்பது கூடுதல் சந்தோஷம்.

தொடர்புடையவை  "கிசு கிசு பேசவும்....யாருக்கும் தெரியாமல் சுற்றவும் அந்த வீடு தான்"!! குன்னூரில் பிரமாண்ட வீடு கட்டியுள்ள சத்யராஜ்!!

இதனிடையே தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆம், வெறித்தனமான லுக்கில் சூர்யாவின் பாதி முகத்துடன் அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர்.

விளம்பரம்

படத்தில் விக்ரமாக சூர்யா நடித்துள்ளாரா? இல்லை உலகநாயகன் நடித்துள்ளாரா? என்ற சஸ்பென்ஸ் வைத்தே இந்த போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது. படத்தின் வெளியானால் அதற்கான பதில் தெரிந்து விடும்.

சஸ்பென்ஸுடன் வெளியாகியுள்ள சூர்யாவின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!! மாஸான அறிவிப்பை வெளியிட்டுள்ள விக்ரம் படக்குழு!!! 3

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment