லேடி சூப்பர் ஸ்டார் ஆக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளார் நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வந்த இவர் ,தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அவர் நடிப்பில் வெளியாகிய படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

இவருக்கு அடுத்ததாக டெஸ்ட் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க உள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார். அண்மையில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார் நயன்தாரா. தொடர்ந்து படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா தனது கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடனும் அடிக்கடி நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்போது இவர் நடிகர் கவினுடன் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது தீபாவளியை நயன்தாரா குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் நயன்தாரா பட்டாசு வைக்கும் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram