13000 ஆயிரம் அடி உயரத்திலிருந்து அசால்ட்டாக குதித்து சாகசம் செய்யும் “சார்பேட்ட பரம்பரை” துஷாரா விஜயன்!!!

கொரோனா காலகட்டத்தில் தமிழில் OTT வாயிலாக வெளியான படங்களில் மிக முக்கிய படம் “சார்பேட்ட பரம்பரை”. இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் முதலானோர் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சனங்கள் இடமும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த பலரும் படத்தை திரையரங்கில் வெளியிட்டுருக்க வேண்டும் என கருத்து கூறி வந்தார்கள். பெரும் வெற்றி அடைந்த இந்த படத்தில் நாயகியாக அறிமுகமான முதல் படத்துலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகை  துஷாரா விஜயன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

13000 ஆயிரம் அடி உயரத்திலிருந்து அசால்ட்டாக குதித்து சாகசம் செய்யும் "சார்பேட்ட பரம்பரை" துஷாரா விஜயன்!!! 1

விளம்பரம்

இவர் நடிப்பின் மீது கொண்ட காதலால் படிப்பினை பாதியிலேயே விட்டுவிட்டு வாய்ப்பு தேட தொடங்கினார்.இவர் முதல் முறையாக “போதை ஏறி புத்தி மாறி” என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் மீண்டும் முயற்சி செய்ய தொடங்கினார் அப்பொழுது தான் பா.ரஞ்சித் இயக்கும் சார்பேட்ட பரம்பரை படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது மிரட்டலான நடிப்பினை காண்பித்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.மாடர்ன் ஆன திருச்சியை சேர்ந்த இவர் படத்தில் வடசென்னை பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார்.

தொடர்புடையவை  பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க கிளம்பிட்டானுங்க.! லெஜெண்ட் சரவணனை கழுவி ஊற்றிய ராதா ரவி

13000 ஆயிரம் அடி உயரத்திலிருந்து அசால்ட்டாக குதித்து சாகசம் செய்யும் "சார்பேட்ட பரம்பரை" துஷாரா விஜயன்!!! 3

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் “கைதி” புகழ் அர்ஜுன் தாஸ் நடிக்கும் “அநீதி” என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சார்பேட்ட பரம்பரை கொடுத்த அறிமுகம் இவரை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த வண்ணம் உள்ளன.

அண்மையில் நடிகை துஷாரா துபாய் சென்றுள்ளார். அங்கு சுற்றுலா வாசிகளை ஈர்க்க மிக முக்கிய ஈர்ப்பாக ‘ஸ்கை டைவிங்” என்ற விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இது மிகவும் தைரியசாலிகளுக்கே பொருத்தும். இளம் நடிகையான துஷாராவும் இந்த விளையாட்டில் இப்பொது கலந்து கொம்டு அசால்ட்டையாக 13000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

விளம்பரம்

இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மிக தைரியசாலியான இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையும் பட்சத்தில், தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழில் முன்னணி நடிகையாக மாறுவர் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

தொடர்புடையவை  ஜெயம் ரவி வீட்டில் நடந்த பூஜை.! மனைவி தாலிக்கு குங்குமம் வைத்து ஆசீர்வதித்த ஜெயம் ரவி.! Cute Photos.!

விளம்பரம்

Video Courtesy – ViralVideos

விளம்பரம்

Leave a Comment