“யோஹனால் மார்தட்டி கொள்ளும் கவுதம் வாசுதேவ் மேனன்”!!”GVM’க்கும் கிரிக்கெட்டுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா”!!நேற்று ஒரு நாளில் ட்ரெண்டிங்காகும் யோஹன்!!

வெளியிட்டது

"யோஹனால் மார்தட்டி கொள்ளும் கவுதம் வாசுதேவ் மேனன்"!!"GVM'க்கும் கிரிக்கெட்டுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா"!!நேற்று ஒரு நாளில் ட்ரெண்டிங்காகும் யோஹன்!! 1

ஒரு ஒரு இயக்குனருக்கும் என ஒரு தனி பாணி இருக்கும். சிலர் ஆக்ஷன் படங்கள், சிலர் குடும்ப படங்கள், சிலர் புதுவிதமான கதைக்களங்களில் படங்கள், சிலர் காதல் படங்கள் என ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனி மேக்கிங் ஸ்டைல் இருக்கும். பெருமபாலும் நம் ஊர்களில் ஆக்ஷன் கலந்த மசாலா கம்ர்சியல் படங்களே வெற்றி பெரும். ஆனால் நிறைய பேர் பேசியுள்ள காதல் கதைகளிலேயே புதுவிதமாக சொல்லி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி இயக்குனராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற  ஆக்ஷன், எதார்த்த படங்கள் இயக்கி அவர் வெற்றி கண்டிருந்தாலும் ரசிகர்களுக்கு அவர் இயக்கிய மின்னலே, விண்ணைதாண்டி வருவாயா போன்ற படங்களே மிகவும் பிடித்தமான படங்களாக உள்ளன. அவர் இயக்கிய ஆக்ஷன் படங்களில் கூட ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட காட்சிகள் என்றால் அது காதல் காட்சிகளே.

2001ஆம் ஆண்டு மாதவன், நாகேஷ், விவேக், ரீமா சென் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான “மின்னலே” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கவுதம். இந்த படம் மூலம் தான் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ரீமா சென்னும் அறிமுகமானார்கள். படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து சூர்யாவுடன் “காக்க காக்க” படம். நடிகர் சூர்யாவின் வாழ்வில் மிக முக்கிய மைக்கல் இந்த படம். இதுவும் வெற்றிபெறுவவே அடுத்தடுத்து “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “வேட்டையாடு விளையாடு”, “வாரணம் ஆயிரம்” , “விண்ணைதாண்டி வருவாயா”, “என்னை அறிந்தால்” என தொடர் வெற்றி படங்களே.

நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த “துருவ நட்சத்திரம்” படத்தை இப்பொது மீண்டும் முடிந்துவரும் இவர் அடுத்து சிம்புவின் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “வெந்து தனித்து காடு” படம் இயக்கி முடித்துள்ளார். 3வது முறையாக இந்த கூட்டணி “விண்ணைதாண்டி வருவாயா” மற்றும் “அச்சம் என்பது மடமையடா” என படங்களில் பணியாற்றி வெற்றி கூட்டணியாகவே உள்ளனர். இப்பொது மீண்டும் 3வரும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதி எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் இவருக்கு மற்றொரு சிறப்பை அவரது மகன் மூலம் இப்பொது கிடைத்துள்ளது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹன் மேனன். 19 வயதாகும் இவர் தற்போது நடைபெற்று வரும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிராக வீசிய முதல் பந்திலேயே எதிரணியை விக்கெட் பெற செய்து வீழ்த்தி பிரபலமாகியுள்ளார். 11 ரன்கள் எடுத்து குவித்த சேலம் ஸ்பார்டன் அணியின் ஜாஃபர் ஜமாலை முதல் ஓவரிலேயே ஆர்யா யோஹன் மேனன் வீழ்த்தியுள்ளார். அதுவும் இதுதான் அவர் வீசிய முதல் பந்தே ஆகும். நேற்று முதல் இந்த நியூஸ் தான் மிகவும் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்