Categories: சமூகம்

கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் மரணம்! ஆற்காடு அருகே பரபரப்பு!!

வெளியிட்டது
கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் மரணம்! ஆற்காடு அருகே பரபரப்பு!! 1

ஆற்காடு அருகே புங்கனூரில் உள்ள வண்டிக்கல் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் திருமலை, விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சந்தியா(22), பட்ட படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் சந்தியா அவர்களது நிலத்திற்கு சென்று மாட்டிற்கு புல் அறுக்கும் நோக்கில் சென்றுள்ளார். பின்னர், புல்லை அறுத்து கொண்டு வரும் வழியில் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார்.

இந்த நிலையில், நேரமாகியும் மகள் வராத காரணத்தால் சந்தேகமடைந்த அவரது தாயார் மற்றொரு மகளுடன் சந்தியாவை தேடிச் சென்றார்கள். அப்போது கிணற்றில் பார்த்த போது சந்தியாவின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து, திமிரி இன்ஸ்பெக்டர் காண்டீபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்