பிரபல யுடியூபர் இர்பான், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று உணவுகளை ருசிபார்த்து அதனை விமர்சனமாக செய்பவர். இதனால் பல நாடுகளுக்கும் சென்ற அவர் , அங்குள்ள உணவுகள் குறித்து வீடியோ வெளியிட்டு பிரபலமாகி உள்ளார். இவரின் வீடியோக்களை காண்பதற்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது இருக்கிறது. தற்போது இவர் உணவு விமர்சனம் மட்டுமில்லாமல் உணவு சமைக்கவும் தொடங்கி இருக்கிறார்.

குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்துகொண்டு சமையலில் அசத்தி வருகிறார் இர்பான். இந்நிலையில் அண்மையில் இவர் தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் கரு ஆணா பெண்ணா என வெளிநாட்டில் கண்டறிந்து அதனை வீடியோவாக வெளியிட்டு சிக்கலில் சிக்கி இருந்தார். இது மிகவும் பேசும்பொருளாக இணையத்தில் உருமாறி இருந்தது.
இந்நிலையில் யுடியூபர் இர்பான் தற்போது பைக்கை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஓட்டி சென்று உள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அவருக்கு ரூ.1500 அபராதமாக விதித்து உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.