கிடைக்காத பட வாய்ப்புகள்..! சீரியலில் ஹீரோவாக களம் இறங்கும் மயில்சாமி மகன்.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

திரையுலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்த போதிலும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர்கள் சிலர் மட்டுமே இருக்கின்றனர். அந்த வகையில் மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஒரு காமெடி நடிகராக இருப்பவர் தான் மயில்சாமி. 1984ம் ஆண்டு ‘தாவணிக்கனவுகள்’ என்கிற படத்தில் ஒரு குழு நடிகராக அறிமுகமாகி, அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் சென்ற வருடம் சிவராத்திரி அன்று கோவிலில் இரவு முழுவதும் பூஜை செய்துவிட்டு விடியற்காலை வீடு திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக மறைந்திருந்தார். இவரது மரணம் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இன்றளவும் மயில்சாமி செய்த உதவிகளையும் அவர் செய்த நல்ல விஷயங்களையும் மக்கள் பேசி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்காத பட வாய்ப்புகள்..! சீரியலில் ஹீரோவாக களம் இறங்கும் மயில்சாமி மகன்.! ப்ரோமோ இதோ.! 1
மயில்சாமி இறந்து ஒரு வருடங்களை நெருங்கி இருக்கும் நிலையில் தற்போது அவரது மகன் யுவனுக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மயில்சாமிக்கு அன்பு மற்றும் யுவன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையுமே நடிகராக பார்க்க மயில்சாமி மிகவும் விரும்பினார். மூத்த மகன் அன்பு 2002ம் ஆண்டு வெளியான ‘அல்டி’ என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் 2021ம் ஆண்டு ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. அதேபோல் இவரது இரண்டாவது மகனும் சில படங்களில் நடித்திருந்த போதிலும், சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் இரண்டாவது மகன் யுவனுக்கு தற்போது சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘தங்கமகள்’ என்கிற சீரியலில் யுவன் நடிக்க இருக்கிறார் இந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக ‘நம்ம வீட்டுப. பொண்ணு’ சீரியலில் பிரபலம் அஸ்வினி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். நேற்று இந்த நாடகத்தின் முதல் ப்ரோமோவை பிக் பாஸில் முதல் முறையாக ஒளிபரப்பி இருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்