ஏக்கத்தில் காத்திருந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யுவன்!

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜா மகனான யுவன் ஷங்கர் ராஜா தற்போதுள்ள இளைஞர்களை தன்னுடைய இசையால் கட்டியிழுத்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். 1997 ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் இன்று தமிழ் சினிமாவின் bgm king என்றால் யுவன் தான் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

ஏக்கத்தில் காத்திருந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யுவன்! 1

இவர் இசை அமைத்த பெரும்பாலும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இசையில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. அதை தொடர்ந்து வலிமை , டிக்கிலோனா , மாநாடு , மாமனிதன் என பல படங்களில் இசையமைத்துள்ளார் யுவன். இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் யுவனிடம் அவ்வப்போது ரசிகர்கள் தனக்கு ஹாய் அல்லது ஹெலோ துன்று அனுப்ப சொல்லி கோரிக்கை வைத்து வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஒரு ரசிகர் தனக்கு லவ் யு ப்ரோ என்று அனுப்புங்கள் நான் 3 மாதமாக இதற்காக காத்திருக்கிறேன் என்று ப்ளீஸ் பண்ணி கேட்டார். இதை கவனித்த யுவன் உடனே அவருக்கு லவ் யூ பிரதர் என்று ரிப்ளை செய்தார். யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய ரசிகர்கள் மீத எந்தளவிற்கு பாசம் வைத்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது. இதை பார்த்த யுவன் ரசிகர்கள் இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்