சன் டிவியில் ரோஜா என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் தற்போது சன் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்று இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் தான் ரோஜா. இந்த சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரி. அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சிபு சூர்யாவும். ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரியும் நடித்து வந்தனர். இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்த இந்த நாடகம் நிறைவடைந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளுக்காவே ரோஜா தொடரை மக்கள் அதிகமாக பார்க்க தொடங்கினர். மேலும் இந்த நாடகத்தில் வரும் கோர்ட் காட்சிகளுக்காக தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சீரியலில் பல லாஜிக் ஓட்டைகள் இருந்தது. குறிப்பாக தசாவதாரம் படத்தில் கமலை விஷ்ணுவின் சிலையுடன் கட்டி வீசுவது போன்று ரோஜாவையும் அம்மன் சிலை உடன் கட்டி வீசுவார்கள். ஆனால் அவருக்கு மேக்கப் சிறிது கூட கலைந்திருக்காது. இந்த காட்சிகள் மிகுந்த கேளிக்கு உள்ளாகின. அதேபோல் நடு ரோட்டில் விபத்துக்குள்ளாகி கிடந்த ஒருவருக்கு அங்கேயே வைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்தனர். அதுவும் ஒரு பிளாஸ்டிக் முகத்தை எடுத்துக்கொண்டு கையாலேயே அந்த ஆபரேஷனை செய்திருப்பது போல காட்டப்பட்டிருந்தது, மிகுந்த கேளிக்கை உள்ளானது. இருந்தபோதிலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கவே செய்கின்றது. மீண்டும் சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவரும் ரோஜா பாகம் 2 வில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சன் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்று இருக்கிறார் நடிகை பிரியங்கா.
ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீதாராமன் என்கிற தொடரில் நடிக்க இருக்கிறார். இந்த தொடரின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்கிற தொடரில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த ஜெய் டிசோசா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Zee Tamil