பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தனது மச்சினிச்சியுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் நடனம் ஆகியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் தான் பிரபல நடன இயக்குனர் சாண்டி. தனது நகைச்சுவை உணர்வாலும், எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் குணத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே அமைந்தது. பிக்பாஸ் சீசன் 3-ன் இறுதி வரை வந்தார். ஆனால் இவரால் வெற்றி பெற முடியவில்லை. மலேசியாவில் இருந்து வந்த முகேன் முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. இருந்தாலும், கவின், முகேன், தர்ஷன், லாஸ்லியா ஆகியோருடன் சேர்ந்து இவர் செய்த லூட்டி இவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன இயக்குனராக வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது பிரபலமான நடன இயக்குனராக வளர்ந்து வந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. இவர் ஏராளமான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் கூட 500 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியிருந்த விக்ரம் படத்தில் கமலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருந்தார் சாண்டி. தற்போது பல படங்களில் பணியாற்றி வருகிறார். இவருக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பாக தளபதி 67 படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சாண்டி மாஸ்டரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை அவருக்கு லாலா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. லாலா செய்யும் குறும்புகளை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார் சாண்டி. மேலும் இவரது மச்சினிச்சி சிந்தியாவுடன் இணைந்து நடன பள்ளி வைத்துள்ளார், அவ்வப்போது சிந்தியாவும் சாண்டியும் ட்ரெண்டிங் பாடல்களுக்கு ஆடி வீடியோக்களை வெளியிடுவார். தற்போது வித்தியாசமான முறையில் மச்சினிச்சியுடன் இணைந்து ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O