Advertisement
OPS Exclusive Interview
Advertisement
Honourable Chief Minister O Paneer Selvam gave an Interview to Thanthi TV few hours ago. He discussed about the Current Political Situation in Tamil Nadu. O Paneer Selvam also answered patiently for Pandey’s stupid questions.
Advertisement
ஓபிஎஸ் யோக்கியனா?
சசிகலா ஜெயலலிதாவுடன் ஒன்றாக ஹெலிகாப்டரில் பறந்தவர். இருவரும் ஒருவருக்கொருவர் மாலைமாற்றிக் கொண்டவர்கள். சசிகலாவையும் தன்னைபோலவே பட்டுப்புடவை, தங்கநகைகளை அணிய வைத்து தன்னோடு சேர்த்து நிற்க வைத்து போட்டோ எடுத்துக்கொண்டவர் ஜெயலலிதா!
ஆனால், இந்த ஓபிஎஸ் யார்? சசிகலா குடும்பத்தினர் மூலம் ஜெ.,வுக்கு அறிமுகமானவர். இந்த தொடர்பை பயன்படுத்தி சீனியர்களை ஓரங்கட்டி விறுவிறுவென கட்சிக்குள் தன்னை வளர்த்துக் கொண்டவர். ஜெ-சசி சிறைக்குபோனபோது இருவருக்குமே விசுவாசமாக இருந்து முதலமைச்சர் பதவிக்கு வந்தவர். அமைச்சரான பிறகு, மற்ற அமைச்சர்களிடமும் கான்ட்ராக்டர்களிடமும் சூட்கேஸ்களை வசூல் செய்து கமிஷனை முறைப்படி சசிகலா மூலம் ஜெவிடம் ஒப்படைத்து வந்தவர் இந்த ஓபிஎஸ்.
திமுக ஆட்சியில் இருந்தவரை பொதுப்பணித் துறையில் 30% என்று இருந்த கமிஷன் தொகையை 35% என்றும் பிறகு 40% என்றும் உயர்த்திய புண்ணியம் எல்லாம் ஓபிஎஸ்ஐயே சேரும். கூடுதலாக, ஓபிஎஸ் காலத்தில் தான், கான்ட்ராக்ட் எடுப்பதற்கு முன்பே 40% கமிஷனை கொடுத்துவிட்டுதான் வேலையையே தொடங்க வேண்டும். இந்த ரகசியம் காப்பதற்காக பெரும்பாலான கான்ட்ராக்ட் வேலைகளை தமிழரல்லாத மற்ற மாநில பெரும்புள்ளிகளுக்கே கொடுத்த பெருமையெல்லாம் ஓபிஎஸ்க்கு உண்டு.
தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை சேகர் ரெட்டி மூலம் குத்தகைக்கு எடுத்து பலநூறு கோடியில் புரள்கிறது ஓபிஎஸ்ம் அவரது குடும்பமும். ஓபிஎஸ் மகன் மிகப்பெரிய தொழிலதிபர் – வெளிநாடுகளில் மூலதனம்!
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதிமுக ஜெயித்தது. அப்போதெல்லாம் ஜெயலலிதா-சசிகலா நேரில் வந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்களா? இந்த ஓபிஎஸ் தான் ஒவ்வொரு தேர்தலிலும் அந்த ஊரில் முகாமிட்டு மந்திரிகளுக்கு பணம் பிரித்துக் கொடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்.
ஓபிஎஸ் பெரிய காந்தியவாதி போலவும் ஆன்மிகவாதி போலவும் நடித்து மக்களை ஏமாற்றுகிறார் என்பதை புரிந்துகொள்ளாமல் திமுகவினரும் சேர்ந்து ஏமாறுவது தான் வேடிக்கை.
விஷம் கலந்த சாக்லேட் ஒன்று இருந்தால், சாக்லேட் கவரைப் பார்த்துவிட்டு அதுதான் வேண்டுமென்று குழந்தைகள் அடம்பிடித்து ஆசைப்படுவது இயற்கை. அதில் விஷம் கலந்திருக்கிறது அதை சாப்பிடக்கூடாது என்று நாம் எவ்வளவு சொன்னாலும் குழந்தை கேட்குமா? இதுதான் தமிழக மக்களின் நிலைமை. ஓபிஎஸ் என்னும் விஷசாக்லேட் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.
ஹெலிகாப்டரில் ஜெயலலிதாவோடு பறந்த சசிகலாவுக்கு இத்தனை கோடி சொத்து இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அந்த ஹெலிகாப்டரை கீழே நின்று தொட்டுக்கும்பிட்ட ஓபிஎஸ்க்கும் அவரது மகனுக்கும் குவிந்துகிடக்கும் சொத்துக்களை பார்த்து ஜெயலலிதாவே ஆச்சரியப்பட்ட கதைகளை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்துவிடக் கூடாது.
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளின் தண்டனைகளை மட்டும் சசிகலா அனுபவிக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் பாசிடிவ் விஷயங்களை எல்லாம் ஓபிஎஸ் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமா?
நயவஞ்சக ஊழல்வாதி ஓபிஎஸ் இப்போது பாஜக பயங்கரவாதத்தோடும் கைகோர்த்துக் கொண்டு ஆளுநரையே தனக்கு சாதகமாக செயல்பட வைக்கிறார் என்றால், இவரின் உண்மையான சுயரூபத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டாமா?
#வெற்றிகொண்டான்