ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து கோரி போரட்ட வழக்குகள் ரத்து!

ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து கோரி போராடிய போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்ய செய்து அம்மாநில தற்போதைய முதல் அமைச்சர் ஜெகன் மோகன் இன்று (செப்.13) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இரு மாநிலங்களிலும் பல்வேறு அமைப்புகள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட தொடங்கின. அப்போது ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது போராடிய இளைஞர்கள் மீது 1500 வழக்குகளை அம்மாநில காவல் துறை பதிவு செய்திருந்தது. இதனையடுத்து தான் ஆட்சிக்கு வந்ததும் இவ்வழக்குகளை ரத்து செய்வதாக ஜெகன் மோகன் வாக்குறுதி அளித்திருந்தார்.

விளம்பரம்

இதன்படி இன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு அந்தஸ்து தொடர்பான போராடியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல குற்றம் சாட்டப்பட்ட அனைவர்க்கும் எதிராக வழக்குகளை திரும்ப பெறுமாறு சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு மாநில தலைமை ஆணையர் அறிவுறுத்தாவேண்டும் என தெரிவித்த்துள்ளது.

தொடர்புடையவை  மறைமுக தேர்தலுக்கு தேதி அறிவிப்பு

சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது, ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திராவிற்கான சிறப்பு அந்தஸ்திற்காக போராடியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment