காஷ்மீரின் இயல்பை விற்பதில் உள்ள தோல்விகள்! குறுந்தொடர் 2

இந்தி தேசியவாதத்தை தற்போது அனைத்து மக்கள் மீதும் திணித்து கொண்டு இருக்கிறார்கள். அதன் முன்னோட்டம் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டிருப்பது.

இரண்டு மாதங்களாக காஷ்மீர் பள்ளிகள் காலியாக இருக்கின்றன. அதே போல, சந்தைகள் வெறிசோடியும் காணப்படுகிறது. மேலும், போக்குவரத்து இல்லாத சாலைகள், தடுப்புக்காவலில் உள்ள தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள், தடைசெய்யப்பட்டுள்ள சமூக கூட்டங்கள், துண்டிக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு நிலைகள், செயல்படாத விடுதிகள் என காஷ்மீரின் இயல்பு வாழ்க்கை திணறிவருகிறது.

விளம்பரம்

ஆனால், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டு இருக்கிறது என நம்மை நம்ப சொல்கிறார்கள். ஏனெனில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நேரம் என்பதால், அதிகாரிகளும் அதனை தான் விரும்புகிறார்கள்.

காஷ்மீரின் படகு சவாரி என்பது முக்கியமான ஒன்றாகும். சுற்றுலா பயணிகளின் அலாதியான விருப்பமும் அது தான். ஆனால் படகு உரிமையாளரான நீலோஃபர் என்பவர், “சிறப்பு அந்தஸ்தை” நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாக தனது படகினை சவாரிக்கு வழங்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  டெங்கு காய்ச்சல்:ஸ்டாலின் விமர்சனம்

இப்போதைய சூழ்நிலையில், தகவல் தொடர்பு நிலைகள் மிக பரிதாபமான நிலையில் இருப்பதனால், சுற்றுல்லா பயணிகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில், சுற்றுலா பயணிகளை அரசாங்கம் அழைப்பதிலும் எந்த விதமான அர்த்தமும் இல்லை.

சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக “இயல்பு வாழ்க்கை” திரும்பி விட்டது என அரசாங்கம் கூவி கொண்டு இருக்கிறது. அப்படி ஏதும் உண்மையாக இருந்தால், அந்த இயல்பின் சுதந்திர காற்றை சுவாசிக்க தடுப்புக்காவலில் உள்ள தலைவர்களை ஏன் அனுமத்திக்க கூடாது?

விளம்பரம்

இயல்பு வாழ்க்கை திரும்புகிறது என்றால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏன் இன்னும் கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பன போன்ற கேள்விகளை இந்தியாவின் நட்பு நாடான அமெரிக்கா எழுப்பியது நமக்கு நினைவிருக்கும்.

காஷ்மீரின் இயல்பை விற்பதில் உள்ள தோல்விகள்! குறுந்தொடர் 2 1

உண்மையிலேயே இயல்பு வாழ்க்கை திரும்பி இருந்தால், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் போன்ற அமெரிக்கா தலைவர்கள் காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரங்களுக்காக குரல் எழுப்ப வேண்டிய தேவை இல்லையே! அது மட்டுமின்றி, அமெரிக்காவின் சென்ட் குழு, காஷ்மீரின் மனித உரிமை விவகாரம் குறித்து விசாரணையை ஏன் மேற்கொள்ளவேண்டும்?

விளம்பரம்
தொடர்புடையவை  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

370வது பிரிவை நீக்கியதன் மூலம் அனைத்து இந்திய குடிமக்களுக்கு சமமாக காஷ்மீரிகள் உரிமையை பெறுகிறார்கள் என்றால், ஏன் அதிகளவிலான இராணுவ ஊடுருவல் நடந்தேறுகின்றன என்று காஷ்மீர் மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட கையேடு எல்லா துன்பங்களும் நீங்கி விடும் என்ற நம்பிக்கியில் இருந்த பூர்விக பண்டிதர்களும், அதன் தீவிர தற்போது தன்மையை உணர்ந்து வருகிறார்கள். 370வது பிரிவு நீக்கப்படுவதால் மட்டுமே காஷ்மீரின் இயல்பு வாழ்க்கையை மீட்க முடியாது என்பதை பண்டிதர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

விளம்பரம்

காஷ்மீரிகளின் நில உடமை பாதுகாப்பிற்கும், அரசு வேலைவாய்ப்பு உரிமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அரணாக சிறப்பு அந்தஸ்து இருந்து வந்ததை பண்டிதர்களால் மறுக்க முடியாமல் போகிறது.

அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிய நட்பை கொண்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது கூட “ஹவுடி மோடி” என பிரமாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சட்டங்களும், நடைமுறைகளும் கிழக்கிலிருந்து, மேற்கு வரை பரந்து விரிந்த அதிகார பகிர்வால் அமெரிக்கா செழித்து வளர்கிறது. ஆனால் அமெரிக்காவை போல அதிகார பகிர்வை நட்பு நாடான இந்தியா ஏன் விரும்புவதில்லை? என்ற கேள்வி அனைவரின் எண்ணங்களிலும் எழுகிறது.

தற்போது, காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை மீட்கப்பட்டிருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் பெருமைபட்டு கொள்கிறார். அதே போல, பழைய அரசியல் அமைப்புகளை புதிய தலைமைகளால் திருத்தவும் ஆவல் கொள்கிறார். ஆனால் தற்போது வீட்டு காவலில் இருப்பவர்களை தவிர்த்து தேர்தல் நடக்குமேயானால் அதில் ஆளும் பாஜகவை தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அப்படியேயானால் மட்டுமே அவர்களின் கற்பனை கதையாடல்களுக்கு உயிர் ஊட்ட முடியும். ஆனால் இவை எல்லாம் காஷ்மீரின் இயல்புகளை விற்க முயன்றதில் பாஜகவிற்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வியாகும்!

விளம்பரம்
தொடர்புடையவை  ராஜீவ் காந்தி கொலை குறித்து தான் பேசிய பேச்சை திரும்பப் பெற முடியாது - சீமான்

முந்தைய தொடர்: https://news.tamilglitz.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/

நன்றி தி வயர்
தொகுப்பு விடுதலை தமிழ்முரசு

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment