ஜம்மு காஷ்மீர் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்த்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கைது மற்றும் கடையடைப்பு குறித்தான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேடி அன்று சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அமைதியை ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநில தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வீட்டு வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் கடையடைப்பு போன்ற சிக்கல்களால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தவித்து வருகிறது. அதுமட்டுமின்றி வெளி உலகத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

விளம்பரம்
ஜம்மு காஷ்மீர் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு! 1

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு தடை வித்திக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனை நீதிபதி ரமணா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று (அக்.16) நடைபெற்ற விசாரணையில், அரசாங்கம் வழங்கிய பிராமண பாத்திரத்தில் எந்த ஒரு தடையும் இல்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, 370வது பிரிவை ரத்து செய்த பின்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அறிக்கைகள் ஏன் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மாநாடு திடலுக்கு என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்..! பணிகள் சரியாக நடைபெறுகிறதா என ஆய்வு..!

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரையில் நடந்த கைதுகள், கட்டுப்பாடுகள், கடையடைப்பு உள்ளிட்டவை தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் வரும் அக்டோபர் 25ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment