டெங்கு காய்ச்சல்:ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் என்ற விஷயத்தை மூடி மறைப்பதற்காகவே மர்ம காய்ச்சல் என சொல்லி மக்களை அதிமுக அரசு திசை திருப்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை நேரில் சென்று பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ முறை குறித்து அங்ருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

விளம்பரம்
டெங்கு காய்ச்சல்:ஸ்டாலின் விமர்சனம் 1
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மக்களை சந்தித்த ஸ்டாலின்

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு காய்ச்சலை பற்றி கவலைப்படாமல், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கொ.மு., கொ.பி., என்று வேடிக்கையாக பேசுவது கண்டனத்திற்குறியது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆண்கள் 17 பேரும், பெண்கள் 14 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கூட தெரியப்படுத்தாமல் இதனை மூடி மறைத்து மர்மக் காய்ச்சல் என பொய் பிரசாரம் செய்கிறது அதிமுக அரசு. போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துளளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment