டெல்லியை நோக்கி விவசாய பேரணி!

டெல்லியை நோக்கி உத்தர பிரதேசம் மாநில விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி மாநில எல்லையில் ஆயிரம் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிலுவையில் உள்ள கரும்பிற்கான தொகையை வழங்ககோரியும், இன்னும் பல கோரிக்கைகளுடன் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 17 ஆம் தேதி மேற்கு உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரிலிருந்து பேரணியை தொடங்கிய விவசாயிகள் நேற்று (செப்.20) நொய்டாவை அடைந்தனர். அங்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரின் பிரதிநிதிகள், விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது பயணளிக்கவில்லை என்பதால் பேரணி டெல்லியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து டெல்லி மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

விளம்பரம்

விவசாயிகளின் கோரிக்கைகள்:

  • நாட்டில் மாசடைந்த அனைத்து ஆறுகளையும் சுத்தம் செய்ய வேண்டும். மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். அதிலும் இறுதி தவணையை வட்டியுடன் வழங்க வேண்டும்.
  • பண்ணைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை இலவசமாக வேண்டும்.
  • விவசாயியை குடும்ப தலைவராக கொண்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் உழவர் காப்பீடு திட்டதின் கீழ் கொண்டு வர வேண்டும்.
  • சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.
  • நாடு முழுவது இலவச கல்வி மற்றும் மருத்துவம் என்பதை அமல்படுத்த வேண்டும்.
  • நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் உள்ள பிரச்சனைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
விளம்பரம்

Leave a Comment