
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம்தான் விஸ்வாசம். அப்பா – மனைவி – மகள் பாசத்தை மையப்படுத்தியே இந்த படம் இயக்கப்பட்டு இருந்தது. அஜித்துடன் இணைந்து நயன்தாரா, அனிகா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் உள்பட பலர் நடித்திருந்தனர்.
கடந்த பொங்கல் பண்டிகையை முன் வைத்து திரைக்கு வந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி அளவு வசூலை வாரி குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.139 கோடி வரையில் வசூல் தழுவியது. இந்த நிலையில், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரையில் வெளியான படங்களில் தமிழகத்தில் அதிக வசூலை எடுத்த படங்களின் பட்டியலில் விஸ்வாசம் முதல் இடம் பிடித்துள்ளது.
அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக வெளியான ரஜினியின் பேட்ட திரைப்படம் 2 ஆவது இடம் பிடித்துள்ளது. ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3, 4ஆவது இடமும், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை 5 ஆவது இடமும் பிடித்துள்ளது. தமிழக வசூலில் 5ஆவது இடம் பிடித்த இப்படம், சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.5.31 கோடி கொடுத்து முதலிடம் பிடித்துள்ளது. 2 ஆவது இடத்தில் தனுஷின் அசுரன் படம் இடம்பெற்றுள்ளது.