தர்பார் படத்தை பற்றி அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட அனிருத்!!

தர்பார் படத்தை பற்றி அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட அனிருத்!! 1

தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கூட்டணியில் உருவாகி வருகிற திரைப்படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்திரமுகி படம் பிறகு இவர்களது கூட்டணி இப்படம் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார் திரைபடத்தின் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்திருக்கும் நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது ரஜினி படபிடிப்பு முடிந்த கையேடு கடந்த 4-ம் தேதி சென்னை திரும்பி, படம் நன்றாக வந்திருப்பதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

விளம்பரம்

பேட்ட திரைபடத்தை அடுத்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்ற நிலையில், அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  "பழக பழக பிடிக்குதே...பழைய ரணங்கள் மறக்குதே"!! ஒருவேளை அத சொல்றாரோ தனுஷ்!!

இந்த நிலையில் அவர் தர்பார் படத்தின் அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைவரின் தீம் மியூசிக் உடன் வரும் நவம்பர் ஏழாம் தேதி வெளியாகும்.ரஜினிகாந்த்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மஸ்ஸனா அப்டேட்டை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.அது மட்டுமின்றி தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை வரவேற்க இப்போதே தயாராகி வருவதாக ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment