
விஜய் நடித்து இருக்கும் பிகில் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பைப் பெற்றது.
அது மட்டுமல்லாமல் இந்த ட்ரெய்லர் 2 மில்லியன் பேர் லைக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி ட்விட்டரில் #2MLikesForBigilTrailer என்ற ஹாஸ் டாக் ஒன்றை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நிலையில் பிகில் படத்தின் சென்சார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாமலிருந்து என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிலையில் தற்போது சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி பிகில் படத்தை பார்த்த சென்சார் குழுவினர், பிகில் திரைப்படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அது மட்டுமின்றி இந்த படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை 179 நிமிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த படம் சுமார் 3 மணி நேரம் ஓடும்.
பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டதைத் தொடர்ந்து படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லீ இயக்கி இருக்கிற இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் கதிர், டேனியல் பாலாஜி, விவேக், இந்துஜா, ரோபோ ஷங்கர் என்று ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளனர். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கிய இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மீது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.